அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்--------

* கோடைகால பயிற்சி முகாம் - பெரம்பலூர் மாவட்டம்


* கோடைகால பயிற்சி முகாம் - லெப்பைக்குடிக்காடு கிளை

* மாதாந்திர அமர்வு - ‍ மே 2015


தன்னந்தனியனாக தனியொருவனாக இப்பிரபஞ்சத்தைப் படைத்துப் பாதுகாத்துவரும் அல்லாஹ்வின் பேரருளால் லெப்பைக்குடிக்காடு TNTJ ஊர் கூட்டமைப்பின் மாதாந்திர அமர்வு 01/05/2015 வெள்ளிக்கிழமையன்று துபை TNTJ மர்கஸ் வளாகத்தில் மஃக்ரிப் தொழுகைக்குப்பின் இனிதே நடைபெற்றது.  

* கப்ர் வணங்கிகளின் அசத்திய கொள்கையை வேரறுக்க அணிதிரண்டு வா!

video

* எதிலிருந்து வருகிறது மண்வாசனை?

முதல் மழைத் துளி மண்ணில் பட்டதும், சட்டென்று புறப்பட்டு வந்து நமது நாசியைத் துளைக்கும் அந்த இனிமையான நறுமணம் எப்படி வருகிறது, எங்கேயிருந்து வருகிறது?


அதை ‘மண்வாசனை' என்று சொல்லிவிடுகிறோம். ஆனால், மண்ணிலிருந்தா வருகிறது அந்த வாசனை? இல்லை.

பாக்டீரிய வித்து

மண்வாசனைக்கு ஆங்கிலத்தில் petrichor என்று பெயர். மண் மீது மழைத் துளிகள் பட்டவுடன் வேதிவினை நடப்பதால் மண்வாசனை தோன்றுகிறது.

மண்ணில் வாழும் ஆக்டினோமைசீஸ் அல்லது ஸ்டிரெப்டோமைசீஸ் என்ற பாக்டீரியாக்கள், வெளியிடும் வேதிப்பொருட்களே இனிமை யான மண்வாசனை.

இந்தப் பாக்டீரியா வகைகள் உலகம் முழுவதும் மண்ணில் இழைகளாக வாழ்கின்றன. மண் காய்ந்து போகும்போது, இவை தங்கள் வித்துகளை வெளியிடுகின்றன. மழை வரும்போது மழைத்துளிகள் மண் மீது விழும் வேகத்தில் இந்த வித்துகள் காற்றை நோக்கி மேலே வீசப்படுகின்றன. அதில் வெளிப்படும் வேதிப்பொருள் டைமெதில் 9 டிகலால். நாம் சுவாசிக்காத வித்துகள் மீண்டும் ஈரமான மண்ணில் விழுந்து பாக்டீரிய இழைகளாக மாறிவிடுகின்றன.

ஓசோனும் காரணம்

அதேபோல மழை வருவதற்கு முன்பாகவும் ஒரு வாசனை வரும். அது ஓசோனின் வாசனை. இடி மின்னலுடன் மழை வரும்போது ஏற்படும் மின்சாரம் ஆக்சிஜன், நைட்ரஜன் மூலக்கூறுகளைப் பிளக்கும். அவை இணைந்து நைட்ரிக் ஆக்சைடாக மாறுகின்றன. இது வளிமண்டலத்தில் உள்ள மற்ற வேதிப்பொருட்களுடன் இணைந்து ஓசோனை உருவாக்குகிறது.

ஒரு பகுதியை நோக்கி வரும் புயல் மேகங்கள் இந்த ஓசோனைச் சுமந்துவருகின்றன. அது நமது நாசியை அடைவதால் மழை வருவதை முன்கூட்டியே உணர முடிகிறது.

பண்டைக்காலத்தில் மழைதான் உலகுக்கு வளம் தரும் ஒரே விஷயமாக இருந்தது. அதனால், நமது மூதாதையர் களுக்கு மழை ரொம்ப பிடித்த விஷயமாக இருந்தது. அது மரபணுக்கள் வழியாகக் கடத்தப்பட்டு, நமக்கும் மண்வாசனை பிடித்தமான விஷயமாக இருக்கிறது.

* பிளஸ்-2 தேர்வில், அரசு பள்ளிகள் அளவில் 94.34 சதவீத தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

பிளஸ்-2 பொதுத்தேர்வில் அரசு பள்ளிகள் அளவில் 94.34 சதவீத தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது என்று கலெக்டர் தரேஸ்அஹமது தெரிவித்துள்ளார்.

* நாளை வெளியாகிறது பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: தேர்வு முடிவிற்கான இணையத்தளங்கள்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 5 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி முடிவடைந்தது. 

* நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் சமாதி வணங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்ஷா அல்லாஹ் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் சமாதி வணங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,பேய் பிசாசு, சூனியம் என்ற பெயரில் பரிகாரம் செய்வதாகக் கூறி அப்பாவிகளிடம் மோசடியாக பணம் பறிக்கும் முஸ்லிம் பெயர்தாங்கிகள் மீதும்,புரோகிதத்தை எதிர்த்து குரல் கொடுப்பவர்களுக்கு மையவாடியில் இடம் கொடுக்கக் கூடாது என்றெல்லாம் தீர்மானம் போட்டு மனித உரிமைக்கு எதிராக செயல்படும் சமூக விரோதிகள் மீதும்,பொது மேடைகளில் கொல்லுவேன், தலையை வெட்டுவேன், சொத்துக்களை சூறையாடுவேன் என்று மிரட்டல் விடும் ரவுடிகள் மீதும்,வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தியும்,

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
முன்னதாக மே 12 அன்று நடைபெறுவதாக இருந்தது 
[தேதி மாற்றப்பட்டுள்ளது] 
நாள்: மே 14, வியாழக் கிழமை
இடம்: சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை,
நேரம்: காலை 10.30 மணி

கண்டன உரை: ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி


உத்தம நபியை இழிவுபடுத்த விட மாட்டோம் என்பதை உணர்த்திட…
பத்ர் களத்தை கண்ட சமுதாயமே அலைகடலென ஆர்ப்பரித்து குடும்பத்துடன் வா என அழைக்கிறது…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
சென்னை மாவட்டம்.
9566137765, 7708067163.

* ஈரோட்டில் எழுச்சியுடன் நடைபெற்ற 16 வது மாநில பொதுக்குழு , புதிய மாநில நிர்வாகிக‌ள் தேர்வு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 16வது பொதுக்குழு ஈரோட்டிலுள்ள பிளாட்டினம் மஹாலில் 26-04-2015 ஞாயிறு நடைபெற்றது.